Help for smile

heart

Bildung

Förderung der Erziehung und Berufsbildung von Kindern und Jugendlichen

Read More
heart

Mahlzeit

Mit einer einmaligen Spende können Sie auch eine warme Mahlzeit für eine soziale Einrichtung übernehmen

Read More

Dringender Aufruf zur Hilfe in den Überschwemmungsgebieten im Norden Ceylons:

IMG-20181222-WA0034Seit dem 20. Dezember hat es in den betroffenen tamilischen Wohngebieten ununterbrochen geregnet. Zusätzlich wurde von der Regierung der Überlauf des Iranaimadu-Vorhaltebeckens geöffnet, weil der Wasserspeicher überzulaufen drohte. Dadurch aber ergossen sich zusätzliche Wassermassen in die tamilischen Siedlungsgebiete.

Betroffen sind die Regionen Kilinochchi, Mullaitheevu, Vavuniya und Mannar ganze im Nordwesten.

Insgesamt sind weit über 25 000 Familien und mindestens 100 000 Menschen betroffen.

Es sind genau die Regionen, die schon unter dem Krieg bis zum Frühjahr 2009 besonders gelitten haben. Alles, was sie sich auch mit Hilfe von Spenden der Tamilen aus der ganzen Welt mühsam aufgebaut haben, ist jetzt wieder verloren.

Zwar können die Menschen zum Teil wieder in ihre Häuser zurückkehren, aber vieles ist vernichtet, z.B., allein im Distrikt Mullaitheevu sind mindestens 90 Häuser komplett und geschätzte 1800 teilweise zerstört.

Möglichkeiten für gezielte Spenden an Partner(organisationen) vor Ort sind:

Hilfe zur Rückkehr in die eignenen Häuser und Wiederaufbau.

Startkapital für eine neue Lebensgrundlage (Finanzierung von Hühnern, Kühen, Reispfanzen, familiäre Selbstversorgung usw.)

Medizinische Versorgung der kriegsversehrten Familien sicherstellen, z.B. Fahrtkosten zu Ärzten und Krankenhäusern übernehmen.

Finanzielle Subsistenz leisten durch Finanzierung einer Ziege, eines Solar-Panels (Energiesparen) oder Hühnern.

Kinder als (Schul-)Pate monatlich mit jeweils 15,- unterstützen.

Help for Smile e.V. versucht seit vielen Jahren mit Eurer Unterstützung Familien und vor allem Kindern zu helfen. Wir arbeiten zusammen mit lokalen Hilfsorganisationen, kirchenlichen Stellen, (z.B. der Hudec des Bistums Jaffna), um so auch die bedürftigen Familien zu erkennen.

Bei Unterstützung bestimmter Projekte können die Kontaktdaten vermittelt werden. Eebenso erstellen wir Spendenquittungen, weil wir ein gemeinnütziger Verein sind. Ebenfalls können wir Angaben zu einzelnen Überweisungen und finanziellen Hilfen auf Nachfrage erstellen.

Die Not ist für die tamilische Bevölkerung im Norden und Osten wieder einmal sehr groß!

Lassen wir sie nicht vergeblich auf unsere Unterstützung hoffen!

 அண்மையிலே தாயகப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தமும், அடுத்தகட்ட தேவைகளும்

அன்பான சகோதர, சகோதரிகளே !

எமது தாயகப்பிரதேசங்களில் வாழும் உறவுகளின் நல்வாழ்வை மனதிற்கொண்டு உருவாக்கப்பட்ட

Help for Smile e.V. என்ற உதவியமைப்பின் இணையத்தளத்தினூடாக உங்களை அன்புடன் வரவேற்றுக்கொள்கிறோம்.

கடந்த 2018 டிசம்பர் 20ஆம் திகதி இலிருந்து தாயகத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,
மன்னார், யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்த தொடர்ச்சியான கனமழையும்,
திறந்தவிடப்பட்ட இரணைமடுக்குளத்தின் வான்கதவுகளின்வழி பெருக்கெடுத்த வெள்ளமும்
சேர்ந்து ஏற்கெனவே நொந்துபோன நிலையில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த எம் உறவுகளின்
வாழ்வை மேலும் அவலநிலைக்குத் தள்ளியுள்ளன. சுமார் 29 000 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு
லட்சத்திற்கும் அதிகளவிலான மக்கள் இவ்வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் போரின்போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களைக்கொண்ட இம்மாவட்டங்களில்
பொருளாதாரரீதியாக தம் சொத்துகளைப் பறிகொடுத்திருந்த மக்கள் அண்மைய வருடங்களில்
தாம் சிறுகச்சிறுகச் சேர்த்த தங்களின் வாழ்வாதாரங்களையும் வெள்ளத்திடம் இழக்க நேரிட்டுள்ளது.

அனர்த்தம் ஏற்பட்ட உடனேயே புலம்பெயர்நாடுகளிலிருந்தும் தாயகத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தும்

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பொது அமைப்புகளாகவும், தனிநபர்களாகவும் உடனடித்தேவைகள்
வழங்கப்பட்டிருந்தமை மகிழ்வு தருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களிலே ஒரு
தொகையினர் வெள்ளம் வடிந்த பின் தத்தம் வீடுகளுக்குச் சென்று ஓரளவு

இயல்புவாழ்க்கையை வாழக்கூடியதாக இருந்தபோதிலும், ஏனையோர் தங்களின்
வாழ்வாதாரங்களை இழந்த கையறுநிலை காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக முல்லைத்தவு
மாவட்டத்திலே 90 வரையிலான வீடுகள் முழுமையாகவும், 1800 வீடுகள்வரை பகுதியளவிலும்
சேதமடைந்துள்ளன என்று அங்கிருந்து அறியமுடிகிறது.

இந்த இடத்திலே எமது மக்களுக்கான அடுத்தகட்ட தேவைகளைப்
பின்வருமாறு இனங்காணலாம்:
• தத்தம் சொந்த வீடுகளுக்குத் திரும்பிச்சென்று வாழ்வதற்கான வசதியைச் செய்துகொடுத்தல்
• சுயசார் வாழ்வாதாரத்திற்கான முதலீட்டை வழங்குதல் (கோழிப்பண்ணை, நல்லினப்பால்மாடு

வளர்த்தல், விவசாய ஊக்குவிப்பு, வீட்டுத்தோட்டம், காளான் வளர்ப்பு, சிறுகைத்தொழில்கள்.
• தேவையுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான மாதாந்த கல்விசார் உதவி.
• குறித்த குடும்பங்களின் வருமானத்தை மிச்சப்படுத்தக்கூடிய வகையிலே அவர்களின்
வழமையான தேவைகளுக்கான மாற்றீட்டை வழங்குவது. எ-டு: சூரியமின்கலத்தொகுதி,
ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பு.
• மருத்துவ தேவைகள் உள்ளவர்களுக்கான உடனடித்தேவைகளை வழங்குவதனூடாக
அக்குடும்பங்களின் சுமையைச் சற்றே குறைத்து, மகிழ்ச்சியான குடும்பவாழ்வை
அவர்களுக்குச் சாத்தியமாக்கலாம்.

அன்பானவர்களே Help for Smile e.V. பல வருடங்களாகவே தாயகமக்களின் தேவைகளை உணர்ந்து

உங்களின் ஆதரவுடன் உதவித்திட்டங்களை முன்னெடுத்துவருகிறது. அங்குள்ள நம்பிக்கைக்குரிய

சமூக ஆர்வலர்கள், சுயசார் உதவிக்குழுக்கள், உதவியமைப்புக்கள், மதகுருமார் எனப் பல

தரப்பட்டினருடைய ஒத்துழைப்புடன் உதவிதேவைப்படுபவர்கள் இனங்காணப்பட்டு எம் ஊடாகப்

பயனடைகின்றனர். எங்களின் இந்தப் பாதையிலே தம்மையும் இணைத்துப் பயணிக்கும் பல தனிநபர்கள்,

நிறுவனங்கள், உதவியமைப்புகள் உளமார்ந்த திருப்தி அடையும்வகையில் நாம் செயற்பட்டு வருகிறோம்.
எங்களின் ஊடாக நீங்கள் செய்யும் உதவிகளின் மூலம் பயனடைபவர்களின் விபரங்கள் மற்றும்

நிதிச்செலவு பற்றிய ஆதாரம் என்பனவும் விரும்பின் உங்களுக்குப் பெற்றுத்தரப்படும். இதைவிட உதவிகளை

நேரடியாகச் செய்வதற்காக நீங்கள் விரும்பின் தேவையுள்ள பயனாளிகள் இனங்காணப்பட்டு

அவர்களின் தொடர்புவிபரத்தை உங்களுக்குப் பெற்றுத்தருவோம்.

ஆகவே, அன்பான நெஞ்சங்களே அடுத்த நாளை ஏக்கத்துடன் நோக்கியிருக்கும் எம் மக்களுக்கான

எமது கடமையை உணர்ந்து ஏதாவதொரு வகையில் உதவுவதற்கு இன்றே இணைவீர் !