Latest blog posts

அன்பு உறவுகளே !

21. Januar 2016 / admin / Categories

எமது தாயகத்தின் இன்பதுன்பம் ஒவ்வொன்றையும் இதயத்தில் ஏந்திக்கொண்டு வாழும்
உணர்வுபூர்வமான உறவாகிய உங்களுக்கு முதற்கண் வணக்கங்கள். இயற்கை இடிகளையும்
பேரிழப்புகளையும் அடிக்கடி சோதனைகளாகச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஓரினத்தைச் சேர்ந்த
எம்மிடையே, அல்லலுறும் நம் மக்களுக்கான கடமையின் நிமித்தம் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்
உங்களின் உறவு கிடைத்ததையிட்டு எக்கோ அமைப்பின் சார்பில் மிகவும் மகிழ்வடைகிறோம்.
எங ;களுடைய முயற ;சிக ;கு ஆதரவு தர நீங ;கள ; முன்வந்ததையிட்டு உளமார ;ந ;த நன ;றிகள ;.
குறிப ;பாக உங ;களுடைய புரிந்துணர்வுடன்கூடிய உணர்வுபூர்வமான இப ;பங ;களிப ;பினால ;
தாயகத்திலே கடந ;த காலத ;தில ; இடம ;பெயர ;ந ;து வாழ ;பவ ர ;களில ; அவசரமான அத ;தியாவசிய
தேவைகளுக ;கு முகங ;கொடுத ;து நிற ;கும ; நம் உறவுகளிடையே மேலும் சில குடும ;பங ;களுக ;கும ;
தனியாட ;களுக ;கும ; எம ;மால ; உதவ முடியும்.
தாங்கிக்கொள்ள முடியாத பேரிழப்புகளுக்கும் மனநெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்த எம் உயிரினும்
மேலான உறவுகளுக்கு ‚இந்த உலகம் கைவிட்டாலும் உங்களுக்காக என்றும் நாம் உள்ளோம்‘ என்ற
நம்பிக்கையை ஊட்டவேண்டியதன் தேவை எப்போதையும்விட தற்போதுதான் அதிகம் உள்ளது.
ஆகவேதான் இப்படியான நேரத்தில் எதிர்காலம்மீதான அவர்களின் நம்பிக்கை மீண்டும் துளிர்விட
நாம் ஆதரவாய் இருக்கவேண்டும் என்பதே எமது அடிப்படை நோக்கம்.
குறிப்பாக மருத்துவம், சுகாதாரம், போசாக்குணவு, கல்வி மற்றும் வாழ்வாதார சுயதொழிற்பயிற்சி
ஆகிய தளங்களில் செயற்திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் சமூக மட்டத்திலான
அபிவிருத ;தியை ஏற ;படுத ;துவதே எமது நீண ;ட கால குறிக்கோளாக உள ;ளது. அந ;த
வகையில ; இத ;தேவைக ;குட ;பட ;ட குடும ;பங ;களும ; தனிநபர ;களும ; இயல ;புவாழ ;க ;கைக ;கு
மீளுவதற ;கான அவசரத ;தேவைகளை வழங ;குவதை நாம ; நோக ;கமாகக ; கொண ;டுள ;ளோம ;.
அதிகம ; தேவைகளைக ;குட ;பட ;டிருக ;கும ; சிறார ;கள ;, பெண ;கள ;, கணவனை இழந ;தவர ;கள ;,
உடலுறுப ;புகளை இழந ;தோர ; மற ;றும ; முதியோர ; ஆகிய தரப ;பினருக ;கான எங ;களின ;
ஆதரவைத ; தொடர ;வதில ; உங ;களின ; ஆதரவுக்கு என்றும் உண்மையாய் இருப்போம்.
´எங்கள் ஒவ்வொருவருக்காகவும் நாம் ஒவ்வொருவரும் எப்போதும் உள்ளோம்´ என்ற உறுதியை விதைப்பதில்
நீங்களும் இணைந்துள்ளதற்காக உறவுரிமையுடன் நன்றியும் பெருமிதமும்
தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இணைவும் உறுதியும் உழைப்பும் எம் அனைவரிடமும் பெருகப்
பாடுபடுவோமாக !

Comments are currently closed.