Hilfe zur Existenzgründung

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தாயகத்தின் எல்லா மாவட்டங்களிலும் வாழ்வாதார முன்னேற்றத்தை நோக்காகக்கொண்டு அவரவர் தேவைகளுக்கேற்ப உதவி வருகிறோம். இதன்படி இனங்காணப்படும் பயனாளிகளுக்கு எங்களால் உதவி வழங்கப்பட்டு, அந்த நிதி உரிய வகையிலே செலவு செய்யப்படுவதும் எம்மால் உறுதிப்படுத்தப்படும். ஆதரவு தேவைப்படும் இப்பயனாளிகள் பின்வரும் அடிப்படையிலே இனங்காணப்படுகிறார்கள் :

  • கணவனை இழந்த சகோதரிகள்
  • மாற்றுவலுக்கொண்டோர்
  • போரிலே பாதிப்படைந்து உழைக்கும் வலு பாதிப்புற்றோர்
  • இயற்கை அனர்த்தங்களால் நலிவடைந்தோர்
  • பிள்ளைகளை இழந்து வறுமை நிலையிலுள்ள முதிய உறவுகள்

இவர்களுக்கான உதவிசெயற்பாடுகளிலே நீங்களும் நிச்சயம் இணையலாம். உங்களின் விருப்பப்படி எங்களுக்கு ஊடாகவோ அல்லது நேரடியாகவோ நிதியுதவியை அனுப்பிக்கொள்ளலாம்.